பெங்களூரு குண்டு வெடிப்பு! - குற்றவாளிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை!
Oct 17, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு குண்டு வெடிப்பு! – குற்றவாளிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை!

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரு ‘இராமேஸ்வரம் கஃபே ‘ குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஜாமில் ஷரீபை, ஏழு நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ‘இராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச் 1-ஆம்  தேதி சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் என்ஐஏ தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய உள்துறை அதிகாரிகள் இந்த வழக்கை எடுத்து தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.

என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஷிவமொகாவின் முஸவீர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் அகமது தாஹா ஆகியோர் தான், குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க மூலப் பொருட்களை அனுப்பி வெடிகுண்டு செய்ய உடந்தையாக இருந்ததாகக் கூறி, முஜாமில் ஷரீப் என்பவர் மூன்று நாட்களுக்கு முன் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தயாரிக்க மூலப் பொருட்கள் அனுப்பியது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், கூடுதல் விசாரணைக்கு ஏழு நாட்கள் காவல் வழங்கும்படி என்.ஐ.ஏ., தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், முஜாமில் ஷரீபை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இரகசிய இடத்தில் வைத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

இவர், சிக்கமகளூரு மாவட்டம், கலசா பகுதை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் துபாயில் உள்ளனர். 16 ஆண்டு களுக்கு முன், வேலை தேடி பெங்களூரு வந்துள்ளனர்.

பசவேஸ்வர நகரின் ஹவனுார் சதுக்கத்தில் உள்ள சிக்கன் கவுண்டி என்ற உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

வெடிகுண்டு தயாரிக்க கச்சா பொருட்கள் சப்ளை செய்தது மட்டுமின்றி, குண்டு வெடிப்புக்குப் பின், முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவியதும் விசாரணையில் ஒப்புக்கொண்டாதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் முசாவீர் ஹுசைன் ஷாஜிப்,  அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால், 10 லட்சம் வழங்கப்படும் என  என்.ஐ.ஏ தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

Request for Information, Identity of the Informer will be kept Secret. pic.twitter.com/JkMUWay23m

— NIA India (@NIA_India) March 29, 2024

Request for Information, Identity of the Informer will be kept Secret. pic.twitter.com/PBXPRH3DtB

— NIA India (@NIA_India) March 29, 2024

Tags: NiaBangalore 'Rameswaram Cafe' Blast
Share
Tweet
SendShare
Previous Post

ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித்தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம்!

Next Post

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை!

Related News

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies