ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி போட்டி முடிந்தவுடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
Virat Kohli gifted a bat to Rinku Singh after yesterday's match.
King 🤝 King-ku pic.twitter.com/MkLJe3ARmn
— Johns (@JohnyBravo183) March 30, 2024
இந்தத் தொடரின் 9 வது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி போட்டி முடிந்தவுடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.