பணமோசடி வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், அதன் துணை அமைப்புகளும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காகவும், ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததற்காகவும், அந்த அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும், மதக்கலவரங்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டது.
இந்த நிலையில், பணமோசடி வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 3 பேரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
அப்துல் காதர், அன்ஷாத் பத்ருதீன் மற்றும் ஃபிரோஸ் ஆகியோரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் PFI அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.