நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், S.G.M.ரமேஷை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது. இத்தனை ஆண்டுகளாக, நாகப்பட்டினம் தொகுதி வளர்ச்சியடையாமல் இருக்கக் காரணம், இங்குள்ள கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் தொகுதி, நாகப்பட்டினம். உப்பு கலந்து, குடிநீருக்குக் கூடப் பிரச்சினை இருக்கும் தொகுதி.
நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது பயணம் செய்து, தொகுதி மக்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிந்துள்ளோம்.
எனவேதான், நாகப்பட்டினம் தொகுதியை முன்னேற்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, சமீபத்தில் தான் சிமெண்ட் சாலைகளையும், பல ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகளையும் நாகப்பட்டினம் தொகுதியில் அமைத்து கொடுத்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களை மேலும் அதிகரிக்கவே, சகோதரர் S.G.M.ரமேஷ் அவர்களை, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நாகப்பட்டினம் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களைக் கேட்டுப் பெறவும், விரைவுபடுத்தவும், நமது மக்களின் குரலை, நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.
எனவே, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, நாகப்பட்டினத்தில் இருந்து சகோதரர் S.G.M.ரமேஷ் அவர்களைத், தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, கடும் உழைப்பாளிகளான நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நிச்சயம் துணை இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.