ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இயேசுபிரான், சக மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன்னையே தியாகம் செய்து, மீண்டும் உயிர்ந்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நம்பிக்கையை உருவாக்கும் இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.