புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது.
அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நாடகத்தில் சீதை, ஹனுமன் போன்ற தெய்வங்கள் போல் வேடமிட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது இந்த நாடகத்தில் சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சி வழங்குவதாகவும், ஹனுமானின் கதாபாத்திரத்தை சிதைத்தும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த நாடகத்தில் சீதை ராவணனுடன் நடனமாடுவது போலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.
இதுகுறித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” பாண்டிச்சேரி பல்கலைக்கழகதின் கலைத் துறையின் எழினி 2k24 என்ற விழாவின் போது நடந்த அவமானகரமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மரியாதைக்குரிய இதிகாசமான ராமாயணத்தின் பாத்திரங்களை “சோமயணம்” என்ற தலைப்பில் சிதைத்து அவமரியாதையாக சித்தரிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது.
அந்த நாடகத்தில் சீதையை கீதா என்றும், ராவணன், பகவானாக சித்தரித்து நடனமாடுவதாக காண்பிக்கப்பட்டது. மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சியை வழங்குவதாக காண்பிக்கப்பட்டது. மேலும் சீதையை கடத்தும் காட்சியின் போது, ”எனக்கு திருமணமாகி விட்டது, ஆனால் நாம் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறுவது போன்று காட்டப்பட்டது.
இது ராமாயணத்தின் புனிதம் மற்றும் இந்த இதிகாசத்தை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கும் பல லட்சம் கணக்கான மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும், மற்றும் அவமரியாதை செய்வதாகும்.
மேலும், ராமாயணத்தை முன்வைக்கும் இந்த தீங்கிழைக்கும் செயல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புகளால் நன்கு திட்டமிடப்பட்ட செயல். கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புகள் வேண்டுமென்றே ராமரைக் கேவலப்படுத்தவும், சீதையின் புனிதத்தை கேள்வி கேட்கவும் விரும்பினர்.
மேலும், மற்றொரு காட்சியில், ஹனுமான், “காஞ்சனேயா” என்று சித்தரிக்கப்பட்டார், அவரது வால் ராமருடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் ஆண்டவனாக சித்தரிக்கப்பட்டது. இந்த கொடூரமான செயல்கள் இந்து தர்மத்தின் மரியாதைக்குரிய தெய்வங்களை கேலி செய்வது மட்டுமல்லாமல், பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை இழிவுபடுத்துவதாக உள்ளது.
எபிவிபி கருத்து சுதந்திரத்தின் கொள்கையை உறுதியாக நம்புகிறது, ஆனால் இந்த சுதந்திரம் மத நம்பிக்கை மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மரியாதையுடன் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்தக் கண்டிக்கத்தக்க சம்பவத்தின் வெளிச்சத்தில், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1. நாடக ஆசிரியரும் இயக்குனருமான புஷ்பராஜ் (எம்பிஏ முதலாம் ஆண்டு) மற்றும் அதில் நடித்த மிதுன் கிருஷ்ணா, ஸ்ரீபார்வதி, ஆதித்யா பேபி மற்றும் விஷக் பாசி ஆகியோர் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் மத கேலி மற்றும் அவமரியாதை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2. டாக்டர் ஷர்வணன் வேலு, நாடகக் கலைத் துறைத் தலைவர் மற்றும் பிற ஆசிரியப் பணியாளர்கள் (வேறு சம்பந்தப்பட்டவர்கள்) மீது இந்த நாடகத்தை அனுமதித்ததற்காக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் புனிதத்தன்மையை பாதுகாப்பதில் ஏபிவிபி எப்போதும் நிற்கிறது.
எனவே பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய இலக்கியத்தை களங்கப்படுத்திய நகர்ப்புற நக்சல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்” என மாணவர்கள் போராட்டம் செய்தனர்.
















