நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒடிசா மாநிலம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1568ஆம் ஆண்டு முகுந்த தேவ் மன்னரின் வீழ்ச்சிக்கு பிறகு பல பகுதிகளாக சிதறிக் கிடந்த ஒடிசா மாநிலத்தை மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைக்க வேண்டும் என பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஒடிசாவை தனி மாநிலமாக அறிவித்தது.
இன்று ஒடிசா மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் ஒடிசா தின வாழ்த்துக்கள்.
இந்த நாள் ஒடிசாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் அதன் ஆற்றல் மிக்க மக்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேசிய முன்னேற்றத்திற்கு மாநிலம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. ஒடிசா மக்களின் வெற்றி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.