சிறையில் இருந்து ஆட்சி செய்வது சாத்தியம் இல்லாத காரியம் என திகார் சிறை முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திகார் சிறை முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சிறையில் இருந்து ஆட்சி நடத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும்.
முதல்வருடன் தனி பணியாளர் இருக்க வேண்டும். அரசாங்கத்தை நடத்துவது என்பது வெறும் கோப்புகளில் கையெழுத்து போடுவது அல்ல. அரசாங்கத்தை நடத்துவதற்கு அமைச்சரவை கூட்டங்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை, பணியாளர்கள் என அதிக பணிகள் உள்ளன.
துணை நிலை ஆளுநருடன் சந்திப்பு அல்லது தொலைபேசி உரையாடல், சிறையில் தொலைபேசி வசதி இல்லை.முதல்வரை சந்திக்க பொதுமக்கள் வருவார்கள். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
சிறையில் முதல்வர் அலுவலகத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. சிறையில் இருக்கும் கைதிகள் தினமும் 5 நிமிடம் தங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். அப்போது அவர்கள் இடையே நடைபெறும் உரையாடல் பதிவு செய்யப்படும என அவர் கூறினார்.
தற்போது 16 சிறைகள் உள்ளன. அதில் எந்த ஒரு வசதியும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் மீற வேண்டும். இவ்வளவு விதிகளை மீற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.