தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!
Oct 19, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விரிவான பதிலைப் புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, சாகர்மாலா திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு 113 கோடி ரூபாய், குந்துகால் மீன்பிடி இறங்கு தளத்திற்கு 74 கோடி ரூபாய் உட்பட 4 முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்க தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்கத்திற்கு 253 கோடி ரூபாய், விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் துறைமுகத்திற்கு 235 கோடி ரூபாய், சென்னை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்க 97 கோடி ரூபாய் என 11 மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் 26 மீன்பிடி இறங்கு தளங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல், பாம்பன் சிறு துறைமுகத்தில் தூர்வாருதல் மற்றும் ராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் பயணிகள் முனையம் அமைக்கும் திட்டங்களுக்கு சட்டரீதியான சுற்றுச்சூழல் அனுமதிகளை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என்றும், அதன் காரணமாகவே சாகர்மாலா திட்டத்தின்கீழ் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: modernize fishing ports in Tamil NaduUnion Ministry of Ports and ShippingTamil Naducentral governmentlivelihood of fishermen.
Share
Tweet
SendShare
Previous Post

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருந்த பரிதாபம்!

Next Post

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு-தேடுதல் வேட்டையில் காவல்துறை!

Related News

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு; சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies