நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி 1 பில்லியன் டன்களை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக இந்தியாவின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி 1 பில்லியன் டன்னைத் தாண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிலக்கரி லிக்னைட் உற்பத்தி 70% அதிகரித்துள்ளது. நிலக்கரித்துறையின் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 1 பில்லியன் டன்களை கடந்துள்ளது வரலாற்றில் ஒரு மைல்கல் என தெரிவித்துள்ளார்.
இது, துடிப்பான நிலக்கரித் துறையை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகவும், ஒரு முக்கியமான துறையில் ஆத்மநிர்பர்தாவை நோக்கிய இந்தியாவின் பாதையை உறுதி செய்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
A remarkable feat!
Crossing 1 Billion Tonnes in coal and lignite production marks a historic milestone for India, reflecting our commitment to ensuring a vibrant coal sector. This also ensures India's path towards Aatmanirbharta in a vital sector. https://t.co/GxHxnL15zL
— Narendra Modi (@narendramodi) April 1, 2024