நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை புறம் தள்ளிவிட்டு, இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பகவத், நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நோட்டா உபயோகப்படுத்துவது சரியானதாக இருக்காது. இருப்பவர்களில் யார் சரியான நபரோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இது நோட்டா பற்றியது. அதாவது, 5 பேர் வேட்பாளர்கள். ஆனால், அதில் ஒருவரைக் கூட பிடிக்கவில்லை. இவர்களில் ஒருவரைக் கூடத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனக் கூறமுடியாது. காரணம், மக்களாட்சி முறையில் இருப்பவர்களில் சிறப்பான ஒருவரைதான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
நூற்றுக்குநூறு சிறப்பானவர்கள் என்பது கடினமான விசயம். நான் இன்றைய நிலையைப் பேசவில்லை. பண்டைய காலம் முதலே இது நடைமுறையில் உள்ளது.
பாண்டவர்கள், கௌரவர்களுக்குப் போர் என முடிவான பின்பு, சபையில் ஆலோசனை நடந்தது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்று. சிலர் பாண்டவர்கள் தரப்பில், சிலர் கௌரவர்கள் தரப்பில் நின்றார்கள்.
அப்போது, கௌரவர்களின் அறத்துக்கு எதிரான செயல்கள் பற்றி பேசியபோது, பாண்டவர்கள் அறமே வடிவெடுத்தவர்களா என்ன? எனக் கேள்வி கேட்டார்கள். யாராவது தனது மனைவியை வைத்து சூதாடுவார்களா? இவர்களும் பல தவறுகளை செய்துள்ளார்கள். இவர்களை எப்படி அறிநெறியாளர்கள் என்பது? என கேள்வி எழுப்பினர்.
பலராமர் கூறினார். நீங்கள் எல்லோருமே நிறைய விவாதிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் கூறியதையே நாம் செய்வோம் என்று. அவர் அமைதியாக இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்றார். பிறகு கிருஷ்ணரிடம் கேட்கப்பட்டது.
இதன் பிறகு கிருஷ்ணர் ராஜ்யசபையில் உரையாற்றினார். அதை அப்படித்தான் தொடங்கினார். அரசியல் என்பது எப்படிப்பட்டது என்றால், இங்கே நூற்றுக்கு நூறு சிறப்பானவர்கள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விசயம்.
ஆனால், மக்கள் முன்பு ஒரே ஒரு மாற்றுதான் இருக்கிறது. இருப்பவர்களில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுப்பது. பிறகு, பாண்டவர்கள் தரப்பில் தனது வாதங்களை முன்வைக்கப்பட்டன.
இப்போது, நோட்டாவை நாம் தேர்வு செய்யும்போது, சிறப்பானவர்களையும் ஒதுக்கிவிடுகிறோம். இதனால், பயன் மோசமானவர்களுக்குத்தான் கிடைக்கிறது.
ஆமாம், நோட்டோ என்ற வழிமுறை ஏற்பட்டு இருந்தாலும் நோட்டோவை நாம் பயன்படுத்தக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதாவது, தீன்தயாள் ஜி போல, சுலபமாகக் கிடைத்துவிட்டால், இது நல்ல விசயம்தானே என்றார்.