பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் 60% அதிகரித்து, உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கான செலவினங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைகள் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.
அதில் தேசிய நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பார்ப்போம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் 60% அதிகரித்து, உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அந்நாட்டின் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. இதன் அடிப்படையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 91,287 கி.மீ. ஆகா இருந்தது. இது தற்போது ( 2024 ) 1.46 லட்சம் கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை 60% வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவினம் கிட்டத்தட்ட பத்து மடங்கு உயர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில், சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பட்ஜெட் தோராயமாக ₹25,000 கோடியாக இருந்தது, இது 2024-25 பட்ஜெட்டில் ₹2.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
2014ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் தோராயமாக 1000 கி.மீ. ஆக இருந்தது. இது தற்போது 5500 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் மிக நீளமான விரைவுச் சாலையான டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும் பல அதிவேக நெடுஞ்சாலை திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. அவைகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.