நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைவான் மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்.
இந்த துயரத்தை தைவான் மக்கள் தாங்கிக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வர வேண்டும். அவர்களுடன் நாங்கள் என்றும் துணை நிற்போம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.