திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் : அண்ணாமலை கேள்வி!
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் : அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 10:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவானந்தா காலனி, காந்திபுரம், சிஎம்சி காலனி, காமராஜபுரம், காட்டூர் விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நமது பிரதமர் கடந்த பத்து ஆண்டுகளாக, நாட்டின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது தொலை நோக்குப் பார்வையிலான எண்ணங்களை, மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி.

கோயம்புத்தூரின் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், கோவையில் வளர்ச்சிப் பணிகளைச் செய்யத் தவறிவிட்டார். எளிமையாக இருப்பது வேறு. மக்களுக்கான பணிகளை நிறைவேற்றாமல் இருப்பது வேறு.

கடந்த பத்து ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி, கோவையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கியும், மத்திய அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினரால், கோவையின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. நகரெங்கும் குண்டும் குழியுமான சாலைகள், தண்ணீர்ப் பிரச்சினை என மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, தற்போது நடைபெறவிருப்பது, நாட்டிற்கான தேர்தல். திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், திமுக அமைச்சர்கள், திமுக மேயர், திமுக கவுன்சிலர்கள் செய்யாதவற்றை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் எப்படி செய்யப் போகின்றார். பாராளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது, பொதுமக்களுக்கு எந்தப் பலனையும் தராது என்பது கடந்த பத்து ஆண்டுகளில் நாம் கண்ட உண்மை.

இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும், தீர்வு வேண்டும் என்றால், பிரதமர் மோடியின் சிறப்புக் கவனம் நமது கோவைக்குக் கிடைக்க, கோவை மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம், தாமரை சின்னம். அனைத்து மக்களும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். நல்லவர்கள் அனைவரும் முன் வந்து வாக்களித்தால்தான், மக்கள் விரும்பும் மாற்றம் உருவாகும். மத்திய அரசின் நலத்திட்டங்களும் முழுமையாகப் பெற முடியும்.

வரவிருக்கும் தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேர்தல். நமது குழந்தைகளுக்கு ஒரு வலிமையான, வளமான நாட்டை உருவாக்க அடித்தளம் அமைக்கும் தேர்தல். நமது நாட்டை வளப்படுத்தவும், பலப்படுத்தவும், தன் ஒருவரால்தான் முடியும் என்பதை, கடந்த பத்து ஆண்டுகள் ஊழலற்ற நல்லாட்சியின் மூலம் நிரூபித்திருக்கிறார்பிரதமர் மோடி.

எனவே, அனைவரும், அவரது கரங்களை வலுப்படுத்த, சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கோயம்புத்தூருக்குச் சேவை செய்யும் வாய்ப்பினை, எனக்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்குப் பதிவு எந்திரத்தில் முதல் இடத்தில் இருக்கும், சாமானிய மக்களின் சின்னம், இளைஞர்களின் சின்னம், தாய்மார்களின் சின்னம், வளர்ச்சியின் சின்னம், அடுத்த தலைமுறையின் சின்னம், நமது பாரதப் பிரதமரின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

Tags: annamalaikovaicoimbatore
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உயரும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி!

Next Post

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைவான் மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் :  பிரதமர் மோடி

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies