நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 399 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், 3-வது முறையாக மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 399 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 342 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பீகார் (40 இடங்களில் 17), ஜார்கண்ட் (14 இடங்களில் 12), கர்நாடகா (28 இடங்களில் 22), மகாராஷ்டிரா (48 இடங்களில் 27), ஒடிசா (10 இடங்கள்) அசாம் (14 இடங்களில் 11), மேற்கு வங்கம் (42 இடங்களில் 22) பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.