மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும், கோபாலபுரம் குடும்பத்திற்கு கொடுக்க முடியுமா? அண்ணாமலை கேள்வி!
Sep 11, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும், கோபாலபுரம் குடும்பத்திற்கு கொடுக்க முடியுமா? அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும். கோபாலபுரக் குடும்பம் கொள்ளையடிக்கவா கொடுக்க முடியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும், விஜயகுமாரை ஆதரித்து, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் விஜயகுமாரைத் தேர்ந்தெடுத்தால் மட்டும்தான், ஈரோடு பாராளுமன்றத் தொகுதி வளர்ச்சி பெறும். பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பார்வையில், விவசாயம், தொழில்துறை என அனைத்துத் துறைகளும் செழிக்கும்.

அடித்தட்டு மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். திமுகவின் மூன்று அமைச்சர்கள் இருக்கும் ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், கடந்த 33 மாதங்களாக, திமுக அமைச்சர்களால் செய்ய முடியாத வளர்ச்சிப் பணிகளைத் திமுக பாராளுமன்ற உறுப்பினரால் எப்படிச் செய்ய முடியும்?.

மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி பதவியேற்பது உறுதி. இந்த நிலையில், எதிர்க் கட்சிக் கூட்டணிகளுக்கு வாக்களிப்பது என்பது, நமது வாக்குகளை வீணடிப்பதாகும்.

வேட்பாளர் விஜயகுமார், பவானியில் இருந்து கோவை வரை, தேசிய நெடுஞ்சாலையில், பத்தாயிரம் மரங்கள் நட்டு, 6 முறை பசுமைக் காவலர் விருது வென்றிருக்கிறார். மக்கள் சேவகன் என்ற அடிப்படைத் தகுதி படைத்தவர். அதிகாரம் இல்லாமல், ஒரு சாமானிய மனிதனாக இத்தனை பணிகளை மேற்கொண்ட விஜயகுமாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் கிடைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஈரோடு தொகுதிக்காக அவர் நிச்சயம் அனைத்து நலத்திட்டங்களையும் மேற்கொள்வார்.

ஈரோட்டில் அதிகமாக இருக்கும் கேன்சர் நோய்க்குத் தீர்வாக, ஒருங்கிணைந்த கேன்சர் மருத்துவமனையைக் கொண்டு வருவோம். சாயப்பட்டறை பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வருவோம். இவை ஈரோடு தொகுதியின் முக்கியப் பிரச்சினைகளுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதியான வாக்குறுதிகள்.

சாமானிய மக்களுக்கான பணிகள் செய்யும் வேட்பாளர் விஜயகுமாருக்கு, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும், இரண்டு மடங்கு அதிகமான உழைப்பைக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, 2026-ஆம் ஆண்டு, நேர்மையான ஆட்சி மாற்றம் வேண்டுமென்றால், அதற்கு, இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்களின் கடும் உழைப்பு வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், நாட்டின் வளர்ச்சியோடு, தனிமனித வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும், பிரதமரின் வீடு திட்டத்தில் ரூ. 2,63,000 மானியத்தோடு, 37,838 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 95,782 விவசாயிகளுக்கு, ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம், 15 தவணைகளில், 30,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ரூ.5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு மூலம், 1,84,153 பேர் பலனடைந்திருக்கிறார்கள்.

ரூ.300 சமையல் எரிவாயு மானியம், தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.

ஆனால், பிரதமர் தமிழகத்துக்கு ஒரு ரூபாயில் 29 பைசா தான் தருகிறார் என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும். கோபாலபுரக் குடும்பம் கொள்ளையடிக்கவா கொடுக்க முடியும்?.

சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் நலத்திட்டங்களை, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்குக் கொடுத்திருக்கிறோம். உதயநிதி ஸ்டாலினுக்கு அடிப்படை அறிவு இருந்தால், இப்படிப் பேசுவாரா?. இனியும் நமது பிரதமரைத் தவறாகப் பேசினால், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட உதயநிதியை கஞ்சா உதயநிதி என்று அழைக்கலாமா?.

முதலமைச்சர் கீழ்பவானி வாய்க்கால் மூலமாக மொத்தப் பாசனம் 3 லட்சம் ஏக்கர் என்கிறார். ஆனால், 2 லட்சம் ஏக்கர் தான் பாசனம் நடைபெறுகிறது. நாட்டு நடப்பு கூடத் தெரியாமல் இருக்கிறார் முதலமைச்சர். விடியல் என்ற பெயரில் மக்களை சுடுகாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். திமுக அரசு, மின்சாரக் கட்டண உயர்வு. நிலைக்கட்டணம் உயர்வு, சூரிய ஓளி மின்சாரக் கட்டண உயர்வு. பால் விலை, சொத்து வரி, தண்ணீர் வரி, என அனைத்தையும் விலை உயர்த்தி, பொதுமக்கள் வயிற்றில் அடித்திருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட ஊழலின்றி நல்லாட்சி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பெரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஈரோட்டில், மக்களுக்கான வேட்பாளர் விஜயகுமாருக்கு, சைக்கிள் சின்னத்தில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக தார்மீகக் கடமை ஆகும். கட்சி வேறுபாடின்றி, ஈரோடு பொதுமக்கள் அனைவரும் சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து, விஜயகுமாரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags: bjpannamalaiDMKerode campagin
Share
Tweet
SendShare
Previous Post

399 இடங்களை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி : தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!

Next Post

இ-விசாவை அறிமுகம் செய்த ஜப்பான்!

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies