தேசிய ஜனநாய கூட்டணி மேலும் வலுவடையும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய முன்னேற்றம் மற்றும் பிராந்திய அபிலாஷைகளுக்கு இடையே சரியான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.
NDA ஒரு துடிப்பான கூட்டணி, இந்தியாவின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியது. இந்த கூட்டணியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், தேசிய ஜனநாயக கூட்டணி வரும் காலங்களில் மேலும் வலுவடையும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மீண்டும் ஒரு முறை மக்களின் ஆதரவை பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.
We are also proud to be an integral part of the NDA, which manifests a perfect harmony between national progress and regional aspirations. The NDA is a vibrant alliance, encapsulating India’s diversity. We cherish this partnership and I am sure it will get even stronger in the…
— Narendra Modi (@narendramodi) April 6, 2024