மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு செய்தார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்த சோம்நாத் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.