நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி பாஜகவின் ஆட்சி : அண்ணாமலை பெருமிதம்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி பாஜகவின் ஆட்சி : அண்ணாமலை பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்க்கையை நமது நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்றத் தொகுதியில், தொட்டிப்பாளையம், மாதப்பூர், முத்துக்கவுண்டன்புதூர், முதலிபாளையம், நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நாடு முழுவதும், 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், நாட்டின் நலனுக்காக தைரியமான முடிவுகளைத் துணிந்து எடுக்க முடியும். உதாரணமாக, நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்த முடியும்.

மேலும், பாரதப் பிரதமர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக நமது தொகுதிக்கும் செயல்படுத்த, ஆளுங்கட்சி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர் நமது தொகுதிக்கும் தேவை.

இத்தனை ஆண்டுகளாக, திமுக, அதிமுக கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருந்ததால், நமது தொகுதியின் வளர்ச்சி தேங்கிவிட்டது.

சூலூர், சோமனூர் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியாவின் 40% முதல் 50% வரையிலான விசைத்தறிகள், இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. எனவே இந்தப் பகுதியின் வளர்ச்சி, நமது பாரதப் பிரதமர் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தொகுதியில் விவசாயத்தையும், விசைத்தறி தொழிலையும் நொடித்துப் போகாமல் காப்பாற்ற, மத்திய அரசின் நிதியுதவியுடன் தொகுதியில், நீர் மேலாண்மை, சோமனூர் ஜவுளிப் பூங்கா உள்ளிட்டவற்றைக் கொண்டு வருவோம் என்ற உறுதி அளிக்கிறேன்.

மேலும், கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக, கோவில்கள் நிறைந்த மாதப்பூர் பகுதி கோவில்கள் அனைத்தையும் இணைத்து, ஆன்மீகச் சுற்றுலா திட்டங்களைக் கொண்டு வந்து, இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். நொய்யல் நதி, கவுசிகா நதி இரு நதிகளையும் மேம்படுத்த, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 990 கோடி நிதி, முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து, நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.

நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்க்கையை நமது நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில், நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி வழங்கி, நமது நாட்டை உலக அரங்கில் முன்னேற்றியிருக்கிறார்.

நமது நாடு இன்னும் வேகமாக வளர, அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்கவிருக்கும் தேர்தல் இது. நமது பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, நமது கோவையும் துணையிருக்க வேண்டும்.

கோவையின் நாடாளுமன்ற உறுப்பினராக, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், அண்ணாமலையாகிய என்னை, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நமது குழந்தைகளின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை சிறப்பானதாக்க, தரமான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உள்ளிட்டவை நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதை, கோவையின் நாடாளுமன்ற உறுப்பினராக, நமது பாரதப்பிரதமர் உதவியுடன், ஒரு ரூபாய் லஞ்ச ஊழல் இல்லாமல் நிச்சயம் உறுதி செய்வேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத், சோம்நாத் கோயிலில் ஹர்திக் பாண்டியா வழிபாடு!

Next Post

நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா முயற்சி : மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies