நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் பணிகளில் சீனா ஈடுபட வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ)மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் சீனா குழப்பத்தை ஏற்படுத்தலாம் என பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இதேபோல் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெறும் பொது தேர்தலிலும் சீனா குழப்பத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக சீனா மற்றும் வடகொரியா ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தி தங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
தைவானை கட்டுப்பாட்டில் கொண்டு வருவற்காக சீனா இதனை சோதித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் அணுக்கழிவு நீர் அகற்றம், ஹவாய் காட்டுத்தீ மற்றும் கென்டக்கி ரயில் விபத்து தொடர்பாகவும் சீனா ஏஐ தொழில் நுட்பம் மூலம் சதி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.