பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் 4 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த வாரம் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக நட்டா இன்றிரவு திருச்சி வரவுள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன பேரணிக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.