கல்குவாரி விவகாரத்தில், மதுரை வடக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதியின் சகோதரி காந்திமதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காந்திமதிக்கு வடகரை புதூரில் கல்குவாரி ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த கல்குவாரிக்கு அருகே திமுக எம்எல்ஏ தளபதி, கல் குவாரி அமைக்க முயன்றுள்ளார்.
இது தொடர்பாக பேச காந்திமதி, திமுக எம்எல்ஏ தளபதி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, காந்திமதி மற்றும் அவரது மகள் ஆகியோரை தளபதி குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த காந்திமதி மற்றும் அவரது மகள் ஆகியோர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில், திமுக எம்.எல்.ஏ. தளபதியின் மனைவி சாவித்திரி மற்றும் அவரது மகன் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.