பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி : வானதி சீனிவாசன்!
Sep 4, 2025, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி : வானதி சீனிவாசன்!

Web Desk by Web Desk
Apr 7, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை, இதுதான் பெண்கள் வரலாற்றில் இமாலயப் புரட்சியா? என்று பாஜக எல்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் தேதி நெருங்க, நெருங்க திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இந்தியாவில் அரசியல் அதிகாரம்தான் உண்மையான அதிகாரம். அரசியல் அதிகாரம் இருந்தால்தான், ஒருவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு வர முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேர், பெண்கள் 11 பேர் உள்ளனர். சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்கள் அதிகம் இருக்கும் மத்திய அமைச்சரவை பிரதமர் மோடியின் அமைச்சரவைதான்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையில் 34-வது இடம் அதாவது கடைசி இடம் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் கயல் விழிக்குதான்.

இதுதான் பெண்கள் வரலாற்றில் இமலாயப் புரட்சியா? ஆனால், 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் நிதியமைச்சராக பெண்ணை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் பெண்கள் வரலாற்றில் புரட்சி. இதுதான் உண்மையான சமூக நீதி.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை. இதுதான் பெண்கள் வரலாற்றில் இமாலயப் புரட்சியா?

பாஜக இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த கடந்த அரை நூற்றாண்டாக முயற்சி நடக்கிறது. 1989ல் பாஜக ஆதரவுடன் நடந்த மத்திய அரசுதான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.

அதை நடைமுறைப்படுத்தாமல் பல ஆண்டுகள் தாமதம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

பெண்கள் பல சவால்களை சந்தித்து படித்து தனது திறமையால் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, நீதிபதிகளாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தால் அதற்கு திமுக உரிமை கொண்டாடுவது பெண்களை அவமதிக்கும் செயல். வாரிசு அரசியலில்கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்.

கருணாநிதிக்கு இரு மகள்கள் இருந்தும் அதில் ஒருவர் அரசியலில் இருக்கும் மகன் ஸ்டாலின்தான் அடுத்த வாரிசாக முடிசூட்டப்பட்டார். ஸ்டாலினுக்கு மகள் இருந்தும் மகன் உதயநிதிதான் இளவரசாக முடிசூட்டப்பட்டு அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதுதான் பெண்கள் வரலாற்றில் இமாலயப் புரட்சியா?

திமுகவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அக்கறை இருந்தால், அவரது அமைச்சரவையில் குறைந்தது 10 பெண்களையாவது நியமிக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

அவர்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருக்காமல் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவர வேண்டும். அதுதான் பெண்கள் வரலாற்றில் உண்மையான புரட்சியாக இருக்க முடியும். அதைத்தான் பிரதமர் மோடி செய்துள்ளார்.

மோடியின் அடுத்த ஆட்சியில் பெண்கள் இன்னும் முக்கியப் பதவிகளில் இருப்பார்கள். திமுகவின் ஏமாற்று வேலைகளைக் கண்டு தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். இந்தத் தேர்தலில் தமிழக பெண்களின் ஓட்டு பிரதமர் மோடிக்கே! என்று தெரிவித்துள்ளார்.

Tags: DMKVanathi SrinivasanCoimbatore SouthPrimes Minister Narendra Modi
ShareTweetSendShare
Previous Post

மோடி மீண்டும் பிரதமராக விரலை துண்டித்த நபர்!

Next Post

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மோடியின் உத்தரவாதம் உண்டு : ஜெய்சங்கர்!

Related News

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

ஜப்பானில் விண்வெளி வீரர் என கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞர்!

ஜம்மு-காஷ்மீர் : வெள்ள பாதிப்பு குறித்து ட்ரோனில் ஆய்வு செய்த ராணுவம்!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் : விலை குறையும் பொருட்களின் பட்டியல்!

வேலூர் : ஆதரவற்ற சடலங்களுக்கு சொந்த செலவில் நல்லடக்கம் செய்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies