திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க  விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும்  விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு வங்க அரசு ஊழல் தலைவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. மிரட்டி பணம் பறிக்கும் தலைவர்களை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அவர்களை பாதுகாப்பதற்காக மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்று அவர் கூறினார்.

பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு மாநிலத்தில் சூழல் நிலவுகிறது. மாநிலத்தில் ஏழைகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது. மத்திய நிதியை ஏழை மக்களை சென்றடைய டிஎம்சி அனுமதிப்பதில்லை.மேற்கு வங்கம் முழுவதும் டிஎம்சியின் சிண்டிகேட் ராஜ்ஜியம் நடந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் தலைவர்களிடம் இருந்து 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறிய மோடி, ஊழல் தலைவர்கள் கொள்ளையடித்த பணம், ஏழை மக்களுக்கு திரும்ப வரும் என்றும் மோடி தெரிவித்தார்.

நான் ஊழலை அகற்ற வேண்டும் என கூறுகிறேன். எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு ஊழல்வாதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை பாதுகாக்க டிஎம்சி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து இண்டி கூட்டணியை அமைத்துள்ளன என்றும் மோடி குறிப்பிட்டார். சந்தேஷ்காலி விவகாரத்தில் தொடர்புடையவர்கள்  தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: PM ModiTMCwest bengalSandeshkhali.mata
ShareTweetSendShare
Previous Post

சூரிய கிரகணம் – எந்த ராசி டாப் ?

Next Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது : அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies