பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது.
பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திய அவரது குறிப்பிடத்தக்க பணி, அவருக்கு பரவலான மரியாதையைப் பெற்றுத்தந்தது.
அவரது முயற்சிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.