திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 15-ம் தேதி டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள, போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் நண்பரான தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் அலுவலகம், வீடு உள்ளிட்ட 36 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள்
சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில், திமுக அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர் சிற்றசு அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது
இதனால், திமுக மூத்த தலைவர்கள் உட்பட பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.