கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
Oct 26, 2025, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Apr 9, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரியும், அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் இருப்பதாகவும்,  அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தியது நீதிமன்ற காவலில் உள்ளவர்களையும் பாதித்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமலாக்க இயக்குநரகம் சேகரித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதி செய்து, குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்துவதிலும் மறைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்  முடிவு செய்ய முடியாது.அதனை நீதிபதிகள் தான் முடிவு செய்வார்கள்.

முதலமைச்சர் என்பதற்காக தனி சலுகை வழங்க முடியாது. மக்களவை தேர்தல் பற்றி கெஜ்ரிவாலுக்கு தெரியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனால், தேர்தலை முன்னிட்டு அமலாக்க துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற வாதத்தை ஏற்றுக்கொள் முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அப்ரூவரின் வாக்குமூலம் மீது சந்தேகம் எழுப்புவது என்பது, நீதிபதி மற்றும் நீதிமன்றம் மீது பழிசுமத்துவது போலாகி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல எனறும், கெஜ்ரிவால்  கைது சட்டவிரோதமல்ல என கூறி  ஜாமீன் மனுவை நீதிபதிகள்  தள்ளுபடி செய்தனர்.  அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளார்.

Tags: Enforcement Directoratedelhi high courtdelhi cmDelhi CM arrestKejriwal bail
ShareTweetSendShare
Previous Post

இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!

Next Post

மக்களவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies