இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!
Sep 12, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர்.

மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-ஆம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட 2633 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் 1428 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என கண்டறியப்பட்டது.  நேற்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். தற்போது மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக 500 பேரும், கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளில் 491 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திரிபுராவில் ஒரு தொகுதியில் இருந்து 14 பேர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் தொகுதியில் அதிகபட்சமாக 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அசாமில் 5 தொகுதிகளுக்கு 118 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனுக்கள் திரும்ப பெறும் அவகாசம் முடிந்ததற்கு பின்னர் 61 பேர் களத்தில் உள்ளனர்.

பீகாரில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்டத் தேர்தலுக்கு 146 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. களத்தில் 50 பேர் உள்ளனர்.

சத்தீஷ்கரில் 3 தொகுதிகளில் 41 பேர் களத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் 14 தொகுதிகளில் 247 பேரும், மத்தியப்பிரதேசத்தின்  7 தொகுதிகளில் 88 பேரும், மஹாராஷ்டிராவில் 8 தொகுதிகளில் 204 பேரும்,  ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் 152 பேரும், திரிபுராவில் ஒரு தொகுதியில் ஒன்பது பேரும் களம் காண்கின்றனர்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 500 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ததில் 204 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பின்னர் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் 91 பேரும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் 47 பேரும் களத்தில் உள்ளனர்.

அவுட்டர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கிய 15 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 19-ம் தேதி முதல் கட்டமாகவும், 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்கள் மற்றும யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் 1625 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 1491 பேர், பெண் வேட்பாளர்கள் 134 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: election commisioneciSecond phase election 1210 candidates competition!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாத சீனா : அமித் ஷா

Next Post

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies