இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் சகோதரர் க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழிலும் செய்து வருகிறார்கள். அந்த தொழலில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து “பாலிமர்” வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் வைபவ் பாண்டியா.
இதில், ஹர்திக் பாண்டியா 40 %முதலீடும், க்ருனால் பாண்டியா 40 %முதலீடும் செய்துள்ளனர். மேலும், இவர்களின் சித்தி பையன் வைபவ் பாண்டியாவும் 20 %முதலீடு செய்துள்ளார்.
ஹர்திக்கும், க்ருனாலும் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி வருவதால், இந்த நிறுவனத்தை வைபவ் பாண்டியா, பொறுப்பு ஏற்று கவனித்து வருகிறார்.
இந்நிலையில், வைபவ் பாண்டியா 4.30 கோடியை கையாடல் செய்துவிட்டதாக ஹர்திக், க்ருனால் இருவரும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஹர்திக்கும், க்ருனாலும் புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்ட நிலையில், இவர்களின் பெரியப்பா பையனான வைபவ் பாண்டியாவை, தற்போது மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணத்தை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல், நிறுவனத்தின் ரகசிய திட்டங்களை தெரிந்துகொண்டு, கையாடல் செய்த பணத்தில் இதேபோல் மற்றொரு நிறுவனத்தை துவங்கி, முன்பு துவங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை முழுவதுமாக ஈர்த்து, பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33 சதவீதமாக மாற்றி இருக்கிறார். மேலும் அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வலம் வந்த பெரியப்பா மகன் வைபவ் பாண்டியாவால் குடும்பம் இரண்டாகி உள்ளது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பல அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, குடும்பத்திலும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.