நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் பாஜக வேட்பாளரான எல். முருகன், தொகுதி முழுக்க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, நீலகிரி மக்களவைத் தொகுதி, பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களான திகினாரை, எரகனஹள்ளி, பையன்னபுரம், மல்லன்குழி மற்றும் பாரதிபுரம் போன்ற ஊர்களில், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மேலும், தாளவாடியை சேர்ந்த சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வரும், வனவிலங்கு மனித மோதல்களைத் தவிர்ப்பதற்கான நிரந்தரத் தீர்வு காண்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.
இந்தநிலையில், எல்.முருகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையம் வருகை தர உள்ளார்.
வரும் 14-ம் தேதி மேட்டுப்பாளையம் வரும் ஜே.பி. நட்டா, ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அப்போது, நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
ஜே.பி.நட்டா வருகையையொட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.