மக்களவைத் தேர்தல் 2024 -ஐ யொட்டி, பிரதமர் மோடி வரும் 15 -ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். வேட்பாளர் பெயர் அறிவித்தது முதலே களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் நயினார் நாகேந்திரன்.
இதேபோல, அருகில் உள்ள தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 15 -ம் தேதி அன்று திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மாலை 4.15 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ஏற்கனவே, தமிழகத்திற்கு 8 முறை வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வருகை தர உள்ளார்.
பாரதப் பிரதமர் மோடி வருகையையொட்டி, திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.