திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் : அண்ணாமலை
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சுங்கம் மைதானம், நெசவாளர் காலனி, ஆணையங்காடு சாலை, செல்லாண்டியம்மன் கோவில், கள்ளிமடை, நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற தெலுங்கு தேச கட்சி பொதுச்செயலாளர் naralokeshக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்கள் நலனை முன்னிறுத்தி நடந்த ஆட்சி. வீடற்றவர்களுக்கு மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் சுத்தமான குடிநீர், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை வசதி, முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு கௌரவ நிதி வருடம் ரூ.6,000 என, ஐந்து ஆண்டுகளில் ரூ.30,000, 80 கோடி இந்திய மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள், உலகப் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி என, நமது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நாட்டின் உயரிய பத்ம விருதுகள், சாமானிய மக்களைத் தேடி வருகின்றன. நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன. இந்திய அரசியலின் அடிப்படை மாறியிருக்கிறது என தெரிவித்தார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பது, அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். எனவே, நமது பிரதமர் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நமது கோவை தொகுதியும் துணை இருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகளில், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல், தேர்தல் முடிந்த பிறகு, மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்து, பத்து ஆண்டுகள், ஊழல் செய்து நாட்டைக் கொள்ளையடித்த திமுக, காங்கிரஸ் கூட்டம், மீண்டும் இண்டி கூட்டணி என்ற பெயரில், வந்திருக்கிறது.

தற்போதும் பிரதமர் யார் என்பதை அறிவிக்கவில்லை. பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் யாரும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடும் என தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள போதைப் பொருள்கள் விற்பனையால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயம் பெற்றோர்களுக்கு வந்திருக்கிறது. நமது குழந்தைகளைக் காக்க, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் ஜூன் 4ஆம் தேதியிலிருந்து, அடுத்த 100 நாட்களில், மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

தமிழகம் முழுவதுமே, அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் மக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மலர்ந்திட, இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அடிப்படையாக அமையும்.

நமது நாடு வளர்ச்சியடையும்போது, நமது கோவையும் வளர்ச்சி பெற, நமது பிரதமரின் நலத்திட்டங்களை முறையாக, முழுமையாகச் செயல்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக, கோவையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கோவையின் வளர்ச்சியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டதாக அவர் கூறினாங.

இந்த நிலைமை மாற, கோவையின் உட்கட்டமைப்பு மேம்பட, தரமான, உறுதியான சாலைகள் அமைந்திட, குடிநீர்ப் பிரச்சினைகள் தீர, பாரதப் பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, கோயம்புத்தூரின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வளர்ச்சியின் சின்னம், நம்பிக்கையின் சின்னமாம் தாமரை சின்னத்தில் கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, தமிழகத்தின் நேர்மையான அரசியல் மாற்றம் கோயம்புத்தூரில் இருந்து தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: kovai campaginannamalaiannamalai bjpcoimbatoreannamalai campagin
Share
Tweet
SendShare
Previous Post

சிபிஐயால் கைது செய்யப்பட்ட கவிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

Next Post

திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies