நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகரப் பகுதிகளில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து, மத்திய இணை அமைச்சரும், நீலகிரி பாஜக வேட்பாளருமான டாக்டர் எல்.முருகன், வாக்கு சேகரித்தார்.
அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர், அலைகடலெனத் திரண்டு வந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் புடைசூழ, சாலை பேரணியாகக் கூடலூர் நகர் பகுதி முழுவதும் பொதுமக்கள் தந்த வரவேற்பு மிகுந்த உற்சாகமளிக்கிறது.
பாரதப் பிரதமர் மோடி ஜி.யின் தலைமையிலான, கடந்த பத்தாண்டு கால ஆட்சியே செல்லும் இடமெல்லாம் நமது வாக்கு சேகரிப்பிற்கான மூலதனமாக அமைந்துள்ளது.
நீலகிரி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். களம், தயாராக இருக்கிறது. ஏப்ரல், 19-ம் தேதி வரிசை எண் மூன்றில் உள்ள ‘தாமரை’ சின்னத்தில் வாக்களித்து, நீலகிரி பாராளுமன்ற தொகுதியை தழைக்கச் செய்வீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.