மறு அறிவிப்பு வரும் வரை, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஈரான், இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் அனைவரும், அங்கு இருக்கும் இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இந்தியர்கள் தங்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.