சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தல் 2024 விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளரும் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ” சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில், அக்கல்லூரியின் காட்சித்தொடர்பியல் துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தல் 2024 விழிப்புணர்வு பாடல் (Rise and Vote) வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, நாடாளுமன்ற தேர்தல் 2024 விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். கடந்த நாடுளுமன்ற மக்களவை தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் 67.4% வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.