உத்தரப்பிரதேச மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மொராதாபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, 1980ஆம் ஆண்டு மொராதாபாத் கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலியானதை நினைவு கூர்ந்தார். இந்த வன்முறையின் விளைவாக அப்பாவி வணிகர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று கூறினார்.
வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் முன்மாதிரியை பாஜக அளித்துள்ளது. இன்று உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு இல்லை. கலவரம் இல்லை. உத்தரப்பிரதேசம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக ஆதரவு அளிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்திய முதலமைச்சர், காங்கிரஸ், சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு வளர்ச்சியோ அல்லது ஏழைகளின் நலனோ முக்கியம் இல்லை என்றும் தெரிவித்தார். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட மாஃபியாக்கள் தற்போது கேவலமாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் நிலை வெகுவாக மாறிவிட்டது.
மொராதாபாத்தில் விவசாயி, இளைஞர், பெண், தொழிலதிபர் என ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஏனெனில் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கம் ஆட்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.