தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழ் புத்தாண்டான நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தி கோட்’. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற இளம் நடிகை நடித்து வருகிறார்.
இவர் தமிழில் இதற்கு முன்னர் கொலை என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, சினேகா, லைலா, யோகிபாபு, ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2023 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்தின் பெயர் ‘ தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்’ (Greatest Of All Time) என்று வெளியிடப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நடைபெற்றது. மேலும் ரம்சான் பண்டிகை அன்று இப்படி விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழ் புத்தாண்டான நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பாடலுக்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியது. அதில் தளபதி விஜய் ஸ்டார்ட் மியூசிக் என்று கூறியதும் நாளை முதல் சிங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.