தமிழக பாஜக தலைவரும், பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலைக்கு ஆதரவாக நடைபெற்ற மகளிர் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். நாளுக்கு நாள் அண்ணாமலைக்கு ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது. அண்ணாலைக்கு ஆதரவாக பாரதப் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இதேபோல, பல்வேறு முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரும், பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலைக்கு ஆதரவாக மகளிர் பேரணி நடைபெற்றது.
ஜிபி சிக்னலில் முதல் சிவனந்தா காலணி வரை மகளிர் பேரணி நடைபெற்றது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.