இன்று தமிழ் புத்தாண்டு , தமிழாண்டுகள் அறுபதில் 38வது ஆண்டாக வரும் குரோதி ஆண்டு இது! இந்த ஆண்டு சித்திரை 1ஆம் தேதி மகர இராசியில் சூரியன் பிரவேசம் ஆகும் நேரம் மகர சங்கராந்தி எனப்படும்.
இதன் அடிப்படையில் இந்த குரோதி ஆண்டில் என்ன மாதிரியான பலாபலன்கள் நடக்கும் என்பதை நம் ரிஷிகள் மிகத் தெளிவாக எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள் .
இந்த ஆண்டு மகர சங்கராந்தி புருஷர் ஆண்புலி வாகனத்தில் வருவதால் ஆண்டின் முற்பகுதியில் மிக மிக அதிகமான சூறாவளிக் காற்றுவீசும். இடி மின்னலுடன் கூடிய அதிகமான மழை பெய்யும் . மலை பிரதேசங்களில் அதிகமான புழுதிக் காற்று வீசும் . சதுரகிரி போன்ற வனப்பகுதிகளில் தீ ,பெரும் காட்டாற்று வெள்ளம் இவற்றால் சேதம் உண்டாகும் . ஆடுகள் மாடுகள் பன்றிகள் பெருமளவில் இறக்கும். ஆனாலும் புலிகள் பாதுகாப்பில் பல புதிய நவீன நடைமுறைகள் பின்பற்றப் படும் .
ஊட்டி கொடைக்கானல் மூணாறு வால்பாறை பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பிரதேசங்களில் அதிக அளவு பனிப் பொழிவு ஏற்படும் .
தென் தமிழகத்தில் கடலோரத் தாழ்வான பகுதிகள் சிதைவுக்கு உள்ளாகும்.
இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நல்ல நல்ல மலை பெய்து ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
காவிரி தண்ணீர் இந்த ஆண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு படியே தமிழகத்துக்கு கிடைக்கும்.
காய்கறிகள் பழங்களின் விலைகள் எப்போதுமில்லாத அளவுக்கு கூடும் .கிழங்கு வகைகள் கீரை வகைகள் விலைகள் ஏறும் .தேயிலை,காபி ஏலக்காய் பிஸ்தா திராட்சை முந்திரி கோகோ விலை கட்டுக்கடங்காமல் ஏறும்.மஞ்சள் விலையில் மாற்றம் இருக்காது. விவசாயம் நன்றாக செழிக்கும் .
இப்போது இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியே மீண்டும் அபரிதமான வெற்றியைப் பெற்று ஆட்சி அமைப்பார்கள். எதிர்கட்சிகளுக்கும் ஒரு ராஜா யோகம் அடிக்கும் . ஆனால் நாட்டில் ஆங்காங்கே கலவரங்கள் நடக்கும்.
சொல்வதென்றால் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமான விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும். 6 வழி நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப் படும்.
அரசு செய்வோர் மக்களுக்கான திட்டங்களை நியாயமாக வகுப்பார்கள் .அந்த அரசாங்க நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பெருமளவில் வந்து சேர்ப்பார்கள்.
இலவச காப்பீட்டுத் திட்டங்கள் பெருவாரியான மக்களுக்கு சென்று சேரும் .
பேருந்து போக்குவரத்து கட்டணம் கூடும். மின்சாரக் கட்டணம் கூடும் .
மாநில அளவிலான அரசியலில் பெரிய மாற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கும்.
ஏகப் பட்ட அரசியல் வாதிகள் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனையும் பெறுவார்கள் .
உலகையே அச்சுறுத்தும் வகையில் கொடிய தொற்று நோய் ,விஷ காய்ச்சல் வரும். அதற்கான மருந்தை பாரதம் நாட்டில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள் . இந்தியர்கள் கண்டுபிடித்த அந்த மருந்தினால் கொடிய விஷ காய்ச்சல் நோய் முழுமையாக குணமடையும்.
தீவிரவாதிகளுக்கு மட்டுமில்லாமல் ஊழல்வாதிகளுக்கும் கடுமையான தண்டனை கொடுத்து நீதியை நிலைநாட்டுவார்கள் பாகிஸ்தான் சேட்டைகள் இந்தியாவிடம் செல்லுபடியாகாது . இந்தியாவுக்கு எதிராக சீன செய்யும் சதிவேலைகள் எதுவும் எடுபடாது. இந்தியாவின் எல்லைப் பகுதிகள் எப்போதும் பதற்றமாகவே இருந்தாலும் இந்தியாவின் கை தான் ஓங்கி இருக்கும் .
இந்திய அரசியலில் நடிகர்கள் எடுபடாமல் போகும் போகும் . முக்கிய அரசியல் தலைவருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை நடக்கும் . மிகவும் பழைய அரசியல் கட்சி முதன்மை குடும்பத்தில் வாரிசு பிரச்சனை தலைதூக்கும். பழைய குற்றங்களுக்காக பலர் சிறை செல்லக் கூடும் .
விண்வெளித்துறையில் இந்திய பல புதிய முயற்சிகள் செய்து வெற்றிப் பெறும் . புதிய ஏவுகணைகள் செலுத்தி புதிய சாதனைகள் படைக்கும். காவல் துறையினருக்கு , இராணுவத் துறையினருக்கு நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் தரப்பட்டு , குற்றங்கள் ,சமூக விரோத செயல்கள் உடனுக்குடன் தடுக்கப் படும் . இதே போல் தீயணைப்புத்துறையிலும் புதிய நவீன தொழிநுட்ப வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப் படும்.
பல்லாயிரம் ஆண்டு கால புராதனைக் கோவில்கள் புனரமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடத்தப் படும்.
இந்தோனேஷியா ,ஜாவா,சுமத்ரா ஓமன் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்.