தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புத்தாண்டு திருநாளில் தமிழ்நாட்டிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் இப்பண்டிகை, சமுதாயத்தில் உள்ள உணர்வை புதுப்பித்து, நமது சமுதாய ஒற்றுமையின் அடித்தளத்தை வலுப்படுத்தட்டும். இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு… pic.twitter.com/11rCXUQTET
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) April 14, 2024
இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “புத்தாண்டு திருநாளில் தமிழ்நாட்டிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் இப்பண்டிகை, சமுதாயத்தில் உள்ள உணர்வை புதுப்பித்து, நமது சமுதாய ஒற்றுமையின் அடித்தளத்தை வலுப்படுத்தட்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.