இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால், அங்கு உள்ள 18,000 இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உதவி எண்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுணைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால், அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
📢*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL*
Link : https://t.co/OEsz3oUtBJ pic.twitter.com/ZJJeu7hOug
— India in Israel (@indemtel) April 14, 2024
” இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியும், அமைதியாகவும் இருக்க வேண்டும். இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் நமது நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏதேனும் அவசர உதவிக்கு, +972-547520711, +972-543278392 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பலர் பராமரிப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
மறுபுறம், ஈரானில் சிறு வணிகர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட சுமார் 4,000 இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவைத் தவிர, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும், நடந்து வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், தங்கள் குடிமக்களுக்கு இதேபோன்ற பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.