பாஜக ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை, மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ராம ராஜ்ஜியம் வேரூன்றத் தொடங்கிவிட்டது. இனி யாராலும் அதைத் தடுக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கதுவா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்,
370வது பிரிவை ரத்து, ராமர் கோயிலைக் கட்டுதல், குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) போன்ற பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது.
பாஜக ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை, மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்யும் போது, அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. இதை உலகமே ஒப்புக்கொள்கிறது எனத் தெரிவித்தார்.
மக்கள் தங்கள் கடமைகளை உணரும் சூழ்நிலை நாட்டில் உருவாகி வருகின்றது. ஜிதேந்திர சிங் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.