வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும் படி காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும் படி காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 16, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் ஆகியோர் நிதி அமைச்சராக இருந்த போது, வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும்படி ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்தனர்”, என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2008 முதல் 2013 வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். இவர், 2007 – 2008 வரை மத்திய நிதித்துறை செயலாளர் ஆகவும் இருந்துள்ளார். அவர் ‛ ‘Reserve Bank as the Government’s Cheerleader?’, என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகிதத்தை ஏற்றுக் கொள்ளாமலும், வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும்படி அரசு அழுத்தம் கொடுத்ததையும், அதனை வங்கி ஏற்றுக் கொள்ளாதது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து புத்தகத்தில் சுப்பாராவ்

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த போது ஒரு நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயாராம், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஆகியோர், பொருளாதாரம் குறித்த எங்களது மதிப்பீடுகளை ஏற்காமல், அவர்களின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளை வைத்து நெருக்கடி கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் மாயாராம் கோபத்துடன், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் அரசுடன் ஒத்துப் போகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசுடன் ரிசர்வ் வங்கி மாறுபடுகிறது எனக்கூறினார்.

ரிசர்வ் வங்கி எப்போதும் அரசுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை, எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிக வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கும் மத்திய அரசு, வட்டி விகிதத்தில் மென்மையான போக்கை கடைபிடித்தது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராயாமல் அரசு கூறியது திகைப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மக்களின் உணர்வுகளுக்காக ரிசர்வ் வங்கியின் தொழில்முறை ரீதியிலான முடிவுகளை மாற்றி அமைக்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தேன். எங்களின் கணிப்புகள், எங்களின் கொள்கை நிலைப்பாட்டுடன் ஒத்துப்போக வேண்டும். வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கான கொள்கைகளை சமரசம் செய்தால் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை போகும்.

சிதம்பரம், வழக்கறிஞரைப் போலவே தனது கருத்துகளையும், எண்ணங்களையும் முன்வைத்து வாதிடுவார். பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி போலவே தனது கருத்துகளை தெரிவிப்பார். இவ்வாறு சுப்பாராவ் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

Tags: Pressure on RBI under Congress regime to raise growth rate: Ex-governor alleges
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூர் நில ரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : அமித் ஷா பிரச்சாரம்!

Next Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies