நீலகிரி நாடாளூமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 176 பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் துணை ராணுவ படை, சிறப்பு அதிரடி படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் உதகை காந்தல், நொண்டி மேடு, உள்ளிட்ட 30 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.