மக்களவை தேர்தலில் சில வாக்குச்சாவடி மையங்களில் திமுகவினருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக புதிய நீதி கட்சி தலைவர் குற்றம்சாட்டினார்.
வேலூர் அருகே சத்துவாச்சாரி பகுதியில் உள்ள எத்திராஜ் தனியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு மையத்தை ஏ.சி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வேலூர் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். சில வாக்குச்சாவடி மையங்களில் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பூத் எண் 202-இல் அரசு பெண் அதிகாரி வாக்காளர்களை அசிங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதுபோன்ற செயல்கள் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.