பஞ்சாப் மாநில சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
சங்ரூர் சிறையில் நேற்று இரவு கைதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.