பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இருநாடுகள் இடையே 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை இந்தியா வழங்கியுள்ளது.
தென் சீனக் கடலில் அடிக்கடி ஏற்படும் மோதல்களால் மணிலாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தியா ஏவுகணைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.