கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் ரஷ்யா தனது வான்வழி தாக்குதலை நடத்தியது.
இரண்டு ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித சமரசமும் இன்றி போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைதொடர்ந்து தாக்குதலால் சேதமடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.