காங்கிரஸ் ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் ரவிசங்கர் பிரசாத்,
எமர்ஜென்சியின் போது அரசியல் சட்டத்தை மாற்ற காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்ததாகவும், இது தான் காங்கிரசின் வரலாறு என தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும், தோல்வியின் அறிகுறி எதிர்க்கட்சி தலைவர்களிடம் தெரிவதாகவும் அவர் கூறினார்.