அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உக்ரைனுக்கு அனுப்பி வைப்பதற்காக வெடிமருந்துகள் மற்றும் வான்வழி தாக்குதலுக்கான கருவிகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க ஜானாதிபதி ஜோ பைடன் பிறந்த ஊரான பென்சில்வேனியா பகுதியில் உள்ள ஸ்க்ராண்டன் ராணுவ வெடிப்பொருள் உற்பத்தி ஆலையில் ராணுவத்திற்கான இயந்திர பாகங்கள், வெடிப்பொருட்கள், வான்வழி தாக்கும் கருவிகள் உள்ளிட்டவை தாயரிப்பது வழக்கம் , தற்போது உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக தாக்கும் கருவிகளை ஊழியர்கள் மும்முரமாக தயாரித்து வருகின்றனர்.